Thursday, July 17, 2014

எழுத்தின் சினம்..

குத்திக் கிழித்து..
கூறுபோட்டு..
குறி அறுத்து..
அறுத்த ரத்தம் குடிக்கவைத்து..
உயிர் மட்டும் விட்டு..
ஒவ்வொன்றாய் வெட்டி..
எலும்பு நொறுக்கி
மயிர் கொழுத்தி..
தலையறுத்தும் தீராது.
வன்புணர்வாளர்களை வாசிக்கும் போதெல்லாம்
எழுதிக்கொல்ல நினைக்கும் என் எழுத்தின் சினம்..

Wednesday, July 9, 2014

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கூகுளின் கடைசி பக்கம் வரை
தேடியும் கிடைக்காததால்
உன் பிறந்த நாளுக்கான கவிதையாய்
உன் பெயர் மட்டும்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்  ப்ரியா