Wednesday, December 8, 2021

திருமண நாள் வாழ்த்துக்கள்

நித்தமும் கதை பேசி 
நிதமும்  பகிர்ந்துண்டு 
இன்றைக்கு வாழ்ந்து 
நாளைக்காய் சேமித்து 
சுவைக்காக சண்டையிட்டு 
அளவு மீற மண்டியிட்டு 
ஒன்றாய் உறங்கி 
ஒய்யாரமாய் ஊர் சுற்றி 
பிடித்தவற்றை உண்டு 
படித்தவற்றை போற்றி 
நல்லவை நாடி 
நரை தேடி 
நண்பர்களாய் வாழும் 
தம்பதியருக்கு 
திருமண நாள் 
மற்றுமொரு 
நாளே..

திருமண நாள் வாழ்த்துக்கள் 
ப்ரியா.. 

Friday, April 9, 2021

கண்மணிகளுக்கு பிறந்த நாள் ..

 என் கண்மணிகளுக்கு பிறந்த நாள் 


கண்ணே 

கவியே 

நான் வடித்த ஓவியமே 


பெண்ணே 

பிறையே 

எனை பித்தாக்கும் 

அற்புதமே..


ஒளியே 

விழியே 

எனை  உடைக்கும் 

சிலையே 


வரமே 

வாழ்வே 

எனை மாற்றும் 

மாயாவியே 


உன்னை 

சரணடைந்து 

உனக்காக வாழும் 

பெறுவாழ்வில் 

ஏது 

போதாமைகள்..


பிறந்த நாள்  வாழ்த்துக்கள் 

இயல்  இசை 





Friday, February 12, 2021

வயசு

எல்லாவற்றையும் 

வரையறுத்துக்கொண்டே 

முன்னேறுகிறது 

வயசு..


வயதின் எண்கள் 

உயர உயர 

வார்த்தைகளில் 

வரிகள் சுருங்கிக்கொண்டே 

போகிறது..


வயதின் எந்த 

இடத்தில்  நின்று 

பார்த்தாலும் 

முந்தைய வயதுகளின் 

முட்டாள் தனங்களே 

முன் நிற்கின்றன..


தங்கி விடுதல் 

எந்த வயதிலும் 

தாக்கி விடுகிறது..


பெரும்பாலும் 

அறிவிற்கு வயதில்லை 

வயதிர்ற்கு அறிவில்லை