Tuesday, July 10, 2018

இயலுடன் இனிய பிறந்த நாள்..

காகிதங்களில் 
எழுதிய 
என் கவிதைகளில் 
ஒன்று
உயிர்பெற்றெழுந்து..
வண்ணங்கள் வீசி...
சிறகுகள் விரித்து.. 
மனம் மகிழ்ந்து
சிரிக்கிறது..
உன் மடியில்

நான்  எழுதி
நீ வளர்த்த 
நம் புதுக்கவிதை
இயலுடன் 
இனிய பிறந்த நாள் 
வாழ்த்துக்கள் 

Monday, July 9, 2018

நேரம்..

நாளெல்லாம் அலைந்து
உனக்கு பிடிக்கும் என்று
நான் தேடிய எதுவும்
எனக்கு பிடிக்காமல்
வெறுங்கையில்
வீடு  திரும்பினேன்.

ஏன் இவ்வளவு நேரமாச்சு ?

என்று நீ
கேட்ட நேரத்தில்

அனுப்ப ஆயத்தமானேன்
உன் பிறந்தநாளுக்காக
அலுவல் விடுப்பு..

பிறந்த நாள்
வாழ்த்துக்கள்..