Sunday, May 15, 2016

அறிவு என்பது..

பெரியாரை
தமிழின தலைவராக
ஏற்க முடியாது
என்பற்காக
சீமானும் கருணாவும் ஒன்று
என்று பொய்யுரை பரப்பும்
திராவிட கட்சி நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

தமிழ் நாட்டில் தமிழன்
ஆள வேண்டும் என்று
நாம் தமிழர் பேசுகையில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தெலுங்கு எதிர்ப்பு வாதம்
பேசுபவர்கள்தான்
நாம் தமிழர் கட்சியினர்
என்று பேசும்
தெலுங்கு நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

துண்டறிக்கை
அடிக்க கூட
காசு இல்லாத
நாம் தமிழர்
கட்சியை
ஓட்டுக்கு இரு  நூறு
கடலூரில் கொடுக்கிறார்கள்
என்று  பரப்பும்
அதிமுக /திமுக
நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

ஐம்பது வருடங்கள் 
நடந்த கேடுகெட்ட 
அரசியலை கேள்வி 
கேட்க முன்வராத 
நண்பர்கள் 
முதல் முறையாக 
களமிறங்கும் 
நாம் தமிழரை மட்டும் ஏன் 
குறை கூற வேண்டும்  என்று
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

முரண்பாட்டு 
கருத்துக்களை மட்டுமே 
முன்வைக்க முனைகிற 
நண்பர்கள் 
நாம் தமிழர் கட்சியின் 
சரியான கருத்துக்களை 
பகிர முன் வராதது ஏன்?

அறிவு என்பது 
தவறுகளை சுட்டிக்காட்டுவது 
மட்டுமல்ல.. 
சரியானவற்றை 
அடையாளப் படுத்துவதும்தான்..

Saturday, May 14, 2016

மலரட்டும் மக்களுக்கான நல்லாட்சி...

கொத்துக் கொத்தாய்
கொன்று குவிக்கப்பட்ட
சொந்தங்களை
காப்பாற்ற முடியாத
குற்ற உணர்ச்சி
உனக்கு
இன்னும் இருக்குமானால்...

மானத் தமிழர்களை
மண்டியிடவைத்து
அடிமையாய்
அடிபணிய  கிடத்தியது
அவமானம் என்று
நீ
நினைப்பாயானால்

இந்த தேர்தலே
திமுக,
அதிமுகாவிற்கு
இறுதி ஊர்வலமாய்
இருக்கட்டும்..

ஓட்டுக்காக
நீ
அழுத்துகின்ற
அந்த பொத்தான்
வேட்டாய் மாறி
இவர்கள்
வெடித்துச் சிதறட்டும்..

மதுவும்,
லஞ்சமும்,
ஊழலும்,
சாதிய கொடுமையும்
இவர்களோடு சேர்த்து
மண்ணோடு மண்ணாய்
போகட்டும்..

மலரட்டும்
மக்களுக்கான
நல்லாட்சி
அதற்க்கு
நீ
போடும்
ஓட்டு
மட்டுமே
சாட்சி..

Tuesday, May 3, 2016

சூழ்ச்சி - ஆட்சி

நாம் தமிழரை எதிர்த்து
தங்களை அறிவு ஜீவிகளாக
கட்டிக்கொள்ள முற்படும்
இந்துத்துவ நண்பர்கள்
ஏன் பா.ஜ.காவை கூட பரிந்துரைக்க மறுக்கிறார்கள்?

இவங்களுக்கு நாகேஷ் மாதிரி
கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமோ?

நாம் தமிழரை எதிர்த்து
விஜயகாந்தை மறைமுகமாக
ஆதரிக்கும் மநகூ நண்பர்கள்
மனநிலை என்னவாக இருக்கும்?

மடையனாக இருந்தாலும் பரவாயில்லை
தமிழனாக மட்டும் இருந்து விட கூடாதென்றா ?

சூழ்ச்சி அறிவோம்..
ஆட்சி புரிவோம்..

நாம் தமிழர்