மனதில் நின்ற தருணங்கள்..
வீரமும், தைரியமும் பெண்களுக்கு இயல்பானதே. சூழலும் சுற்றமுமே பெரும்பாலும் அதை அவர்களுக்கு அந்நியமாக்கி விடுகிறது.
திருப்பூரில் பஸ் ஸ்டாண்ட்டுக்கு பின்புறம் கடை இருந்ததால் தண்ணி வண்டி வாடிக்கையாளர்களின் தகராறுகளை தவிர்க்க முடியாது.
அப்படி ஒரு நாள், ஒரு வாடிக்கையாளர் வன்முறையாளராக மாறிவிட்டார். கடைக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா கிரேடுகளை தள்ளிவிட ஆரம்பமானது ரகளை.
சத்தம் கேட்டு நான் (12 வயதிருக்கும்) ஓடி வர என்னுடன் வந்தாள் சசி (16 வயது). அப்பா களத்தில் இறங்கி அவன் காலரை பிடிக்க, எதிர் தாக்குதலுக்கு தயாரானான் தண்ணி வண்டி.
என்ன செய்வதென்று நான் நின்று கொண்டிருக்க, கண்களில் கோவத்தோடு,
அவனை அடிங்கன்னு கத்திகிட்டே முன்நகர்ந்தால் சசி.
பொம்பள பிள்ளைங்க உள்ள போங்கன்னு கடையில இருந்த ஆறுமுகம் மாமா சொல்ல ஆத்திரத்தோட முன்னகராமல் நின்று கொண்டாள் சசி.
அப்புறம் அப்பா அந்த தண்ணி வண்டிய கீழ தள்ள, அத்தோட முடிஞ்சு போச்சு சண்டை..
ஒரு வேளை, ஆறுமுகம் அங்கு இல்லாமல் போயிருந்தால், சசியே அந்த தண்ணி வண்டியை கீழே தள்ளியிருக்கக்கூடும்.