Wednesday, January 18, 2017

வழிகள் பிறக்கும்..

தமிழா தமிழா..
இனி நம்  கரங்கள்
உயர்ந்தால்
வழிகள் பிறக்கும்..

வழிகள் முழுதும்
தடைகள் இருக்கும்
அதை நம்
வலிமை உடைக்கும்.

இனியும் இனியும்
கரங்கள் இணையும்
அதில் நம்
விலங்குகள் உடையும்..

வடக்கும் அறியும்
வலிமை புரியும்
அதுவும்
நம்மிடம்  பணியும்

இளமை துடிக்கும்
இடர்கள்  இடிக்கும்
அரசியல் அதனுள்
வெடிக்கும்..

தமிழா தமிழா
இனி நம்  கரங்கள்
உயர்ந்தால்
வழிகள் பிறக்கும்..


Tuesday, January 17, 2017

தமிழன்டா..

இன்றைய தமிழ்
செய்திகளில்
அதிகம் பேசப்பட்ட
 வார்த்தைகள்..

தமிழன்
தமிழர் பண்பாடு
தமிழர் கலாச்சாரம்
சல்லிக்கட்டு..
போராட்டம்.

தமிழன்டா...

Monday, January 16, 2017

வாடி வாசல் - சல்லிக்கட்டு

தமிழகத்தில்
காளைகளை பாதுகாக்க
முதல் முறையாய்
சிங்கங்கள்
களமிறங்கியிருக்கின்றன..

வாடி வாசல் நிகழ்வு
தமிழக வரலாற்றில்
பெருமிதமாகவும்
வருத்தத்துடனும்
பதியப்படுகிறது..