Thursday, October 31, 2013

இரக்கமின்மை

உயிர் வலிக்க ஓடியும்
ஓய்யாராமாய்
சரிந்து கிடக்கிறது
இரக்கமற்ற
என் வயிறு..

Saturday, October 26, 2013

Proverbs...

If you feel, being fool is making you happy
Be it.
But Don't ask everybody to be so..

Thursday, October 24, 2013

வரவேற்கிறோம்

அவன்
இருள் கிழித்த விடியலாய் அவள்

அவள்
விழி  காக்கும் இமைகளாய் அவன்

இவர்களை
கோர்க்கும் மாலையாய் திருமணம்

உங்களை
வாழ்த்த வரவேற்கிறோம்
இருவரும்.

                                          அவன் - சேது
                                        அவள் - பிரியா
                       இவர்களுக்கு - திருமணம்
                உங்களை - வரவேற்கிறோம்





Thursday, October 17, 2013

நீ நான் வாழ்கை..

என் இருள் கிழித்த விடியலாய் நீ.
உன்னில் துடிக்கும் இதயமாய் நான்..
நம்மேல் விழுந்த பூக்களாய் காதல்..
நாமே கோர்க்கும் மாலையாய் திருமணம்.
நமக்குள் வாழும் ஜீவனாய் வாழ்க்கை.
வா..
துடிப்போம்..
மலர்வோம்..
மகிழ்வோம்..
வாழ்வோம்..

Wednesday, October 16, 2013

அழைப்பிதழ்...

ரும்பு மீசை ஆசை..
தாவணி மூடிய காதல்..
பேசாமல் விட்ட கதைகள்..
பேசிச் சுவைத்த நகைச்சுவை..
தொலைந்து போன தனிமை..
தவித்து தணிந்த பிரிவு..
தாராளமாய் கிடைத்த நட்பு..
தாங்கி பிடிக்கும் குடும்பம்..
கனவு சொல்லும் வாழ்க்கை..
கவிதை கொள்ளும்  காதல்..
இப்படி 'அ' ஆரம்பித்து
அத்தனையும் பேசிச் சுவைக்க
ஆவலாய் ஆரம்பிக்கிறோம்
இம்மணநாளை.

வாருங்கள்..
கொட்டித் தீர்க்கட்டும் உங்கள் வாழ்த்து மழை..
முட்டிப் பூக்கட்டும் எங்கள் காதல் விதை..
                                     
ப்டிக்கு
உங்கள் வாழ்த்து மழைகளில்
நனைய அடம்பிடிக்கும்.
                  சேதுராமன் & பிரியா

Friday, October 4, 2013

பித்து

நான் வரும் நாள் அறிந்தும்
நித்தம் நித்தம் நீ எனை கேட்பது
சத்தியமாய் உன்மேல்
பித்துக்கொள்ள வைக்கிறது


முத்தச்சத்தம்.

என் தனிமையின்
எல்லா நேரங்களிலும்
இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது...

நீண்ட காலமாய் சேமித்து
எனக்காய் செலவழித்த
உன் உதடுகளின்
முத்தச்சத்தம்..