குறை சொல்லி
பழகிப்போன
தமிழ்ச் சமூகத்தில்
குற்றம்
செய்தவனும்
குறை சொல்லும்
கொடுமையை
உணர்ந்த
தருணங்களில்
ஆரம்பித்திருக்கும்
நம் மனநோய்.
நினைவு தெரிந்த
ஒவ்வொரு
அரசியல் நிகழ்வும்
கோபங்களாகவும்
கண்ணீராகவும்
அச்சேறுவதற்க்கு
காரணம்
என்னவாக
இருக்கும்?
முழுவதுமாய்
விடுபட்டு வேறொரு
கண்டத்தில்
வாழ்கிற
நம் நண்பர்களை
விடாமல்
வேறென்ன
காரணம்
இருக்க முடியும்?
சுய மரியாதை
இன்றி வாழ்வதே
இழிவு என்ற
சமூகத்தில்
சுய மரியாதை
துளியும்
இல்லாதவர்களை
ஆள அனுமதித்த
நம் மனநிலை
மனநோயன்றி
வேறென்ன?
தாய் நாட்டை
நினைக்கும்
போதெல்லாம்
பூரிக்க
வேண்டிய
ரத்தம்
பொங்கிக்
கொதித்துப்
புழுங்குவது
மனநோயன்றி
வேறென்ன?
இருப்பது
வாழ்வல்ல..
அறவழியை
வகுத்து இருத்தலே
வாழ்வென்ற
புறநானுற்று
தமிழனின்
தரந்தாழ்ந்த
தற்போதய நிலை
மனநோயன்றி
வேறென்ன?
பழகிப்போன
தமிழ்ச் சமூகத்தில்
குற்றம்
செய்தவனும்
குறை சொல்லும்
கொடுமையை
உணர்ந்த
தருணங்களில்
ஆரம்பித்திருக்கும்
நம் மனநோய்.
நினைவு தெரிந்த
ஒவ்வொரு
அரசியல் நிகழ்வும்
கோபங்களாகவும்
கண்ணீராகவும்
அச்சேறுவதற்க்கு
காரணம்
என்னவாக
இருக்கும்?
முழுவதுமாய்
விடுபட்டு வேறொரு
கண்டத்தில்
வாழ்கிற
நம் நண்பர்களை
விடாமல்
ஒரு சோகம்
துரத்துவதற்குவேறென்ன
காரணம்
இருக்க முடியும்?
சுய மரியாதை
இன்றி வாழ்வதே
இழிவு என்ற
சமூகத்தில்
சுய மரியாதை
துளியும்
இல்லாதவர்களை
ஆள அனுமதித்த
நம் மனநிலை
மனநோயன்றி
வேறென்ன?
தாய் நாட்டை
நினைக்கும்
போதெல்லாம்
பூரிக்க
வேண்டிய
ரத்தம்
பொங்கிக்
கொதித்துப்
புழுங்குவது
மனநோயன்றி
வேறென்ன?
வாழ்வல்ல..
அறவழியை
வகுத்து இருத்தலே
வாழ்வென்ற
புறநானுற்று
தமிழனின்
தரந்தாழ்ந்த
தற்போதய நிலை
மனநோயன்றி
வேறென்ன?
மதிகெட்டுப்போன
இந்த மனநோய்
தொற்றுச்
சமூகத்தில்
அறச்சீற்றம்
கொண்ட
எவனும்..
எவளும்..
அனிதாவும்..
வாழ்வது
ஆச்சரியமே.
வாருங்கள்..
சில வரிகள்
எழுதிவிட்டு..
சில முறை
பகிர்ந்து
விட்டு
கொண்டாடுவோம்
நம் மனநோயை..
No comments:
Post a Comment