பாறைன்னு நினைச்ச நெஞ்சு உன் பார்வைக்குத்தான் ஏங்குதடி..
முட்ட கரியின்னு மூணு வேல திங்கிறவன்
மூணு இட்லிய முழுசா தாண்டலையே..
வாயெல்லாம் பல்லாச்சே.. வயசுக்கு வந்து நாளாச்சே
முத்தம் கொடுக்கிரதுக்கே முப்பது வயசாச்சே..
வண்டி மாடாட்டம் ஊர் ஊரா சுத்தறவன்
உள்ளங்கைய தொட்டதுக்கே உடம்பெல்லாம் சிலுக்குதேடி..
சண்டி மாடாட்டம் உன்ன மட்டும் சுத்துரேனே..
உள்ளங்கைய தொட்டதுக்கே உடம்பெல்லாம் சிலுக்குதேடி..
உள்ளத பாத்துபுட்டா உயிருக்கு என்னாகும் ?
காமா சோமான்னு கண்டதெல்லாம் பேசுறவன்..
கண்ணே மணியேன்னு கவிதையிலகொஞ்சிரனே..
காதல் கடுசுன்னு காலமெல்லாம் நினைச்சிருந்தேன்
கல்யாணம் பேசயிலே பொசுக்குன்னு பூத்திருச்சே..
காஞ்ச மாடாட்டம் கம்புல நான் பாயுறனே
கனிஞ்ச கொடியே நீ காயம் படாம பாத்துக்கடி..
காஞ்ச மாடாட்டம் கம்புல நான் பாயுறனே
கனிஞ்ச கொடியே நீ காயம் படாம பாத்துக்கடி..
No comments:
Post a Comment