என் எழுதப்படாத கவிதையே..
இதயம் பேசும் உரையாடலே.
மோதி உடையும் மோகக்குமிழியே..
படிக்க நினைக்கும் புத்தகமே..
மேனி நனைக்கும் மழைத்துளியே..
தேடிக் கிடைத்த புகைப்படமே..
என் தேடல் நிறைத்த உயிர்குடமே..
வா...
பார்வைகளில் கரைந்து போவோம்..
வார்த்தைகளில் உறைந்து போவோம்..
வாழ்கையில் கலந்து போவோம்..
காத்துக்கிடக்கும் உன் நெற்றிக்கு..
என் முத்தத்தில் பொட்டு வைத்து .
தொடங்குவோம் நம் மண நாளை..
No comments:
Post a Comment