Sunday, August 2, 2015

நட்பை மகிழ்ந்த தருணங்கள்..

நீண்ட நெடுங்காலமாய் ஒன்றாய் பயணித்து
நின்று நினைக்கும்போதெல்லாம்..
நினைவில் மின்னலடிக்கும் 
உன்னை பற்றிய ஒவ்வொரு 
தருணங்களும்..
நான்..
நட்பை மகிழ்ந்த தருணங்கள்..

#கால்கடுக்க நின்று 
பேசியதையே திரும்ப பேசி 
விடைதெரியாமல் வீடு திரும்பிய 
ஒவ்வொரு நாட்களும்..

#வேலை வேண்டி 
வெள்ளிங்கிரி மலை வரை நடந்து 
திரும்பும் போது வண்டியின் 
பில்லியனில் உறங்க..
திடீரென்று வண்டியை நிறுத்தி 
இடுப்பை கட்டிக்கொண்டு உறங்க சொன்ன 
வார்த்தைகளில்..

#ஒன்றாய் தங்கி
ஊர் ஊராய் சுற்றி 
வேலைக்காக படித்து 
ஏசிக்காக தியேட்டர் சென்று 
இளைப்பாறிய தருணங்களில்..

#கல்லூரி கேண்டீனில் 
மோர் குழம்பு நாலன்று
முண்டியடித்து முயன்று 
ஒரே தட்டை இருவரும் பகிர்ந்து 
பசியாறிய ஒவ்வொரு மதியமும்..

#கைபிடித்து கண்ணீர்விட்டு 
கடைசியாய் பிரிகிறோம் என்று 
கல்லூரியில் சொன்ன தோழியின் குறளை 
வாட்ஸ்அப்பில்  வாழ்த்துக்களாய்  
படிக்கும் தருணங்களில்..

#வேலையில் சேர்ந்து 
கையில் பணம் இல்லாமல் 
பிறந்தநாளுக்கு 
பண்ணும் உறுகாயும் 
பரிசளித்து பாட்டுப் பாடிய 
நிமிடங்களை நினைக்கும் போதெல்லாம்..

#ஒன்றாய் வேலை செய்கையில் 
Break என்று வார்த்தை கேட்டவுடன் 
ALT + CNTL + DELETE  பட்டனை 
அழுத்தும் உன் விரல்களை 
பார்க்கும் போதெல்லாம்..

#என்னை பற்றிய அவதூருகளை 
நீ என்னிடம் சொல்லும்போதும்..
அதை மறுத்து பிறரிடம் சொல்லும்போதும்..

#வேலை முடிந்து வீடு திரும்பையில் 
யாருமில்லாத ரோட்டில் 
ஒன்றாய் இரண்டு வண்டியின் 
தேர் பயணத்தில்..
நடுவே குடித்த தேநீர் ருசியில்..

#உன் குடும்பத்துடனான   
close friend  என்ற 
அறிமுகத்தில்..

#சந்தோசத்தை பகிர்ந்து 
இரடிப்பாய் உணர்ந்த  தருணங்களும் 
துக்கத்தை பகிர்ந்து 
லேசாய் உணர்ந்த தருணங்களும்..

#இப்பட்டியல் நீள 
உங்களுடன் தொடர்ந்து பயணிக்க எத்தனிக்கும் 
ஆசையுடன் ...   
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 

1 comment: