Friday, July 10, 2015

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

எப்படித்தான் பிரசவிக்கிறதோ
உன்
பிறந்த நாளுக்கு மட்டும்..
இதயங்களில் இணைந்து
கைவழியே பிறக்கும்
என் கவிக்குழந்தை...

அதிகாலை பனித்துளி
பூக்களை முத்தமிட்டு 
புல் நுனியில் தவமிருப்பது போல..
கவிதையில் வாழ்த்திவிட்டு 
காத்திருக்கிறேன் நான்...

வா..
நீ பிறந்த இந்நாளை..
நம் சுதந்திரதினமாய் கொண்டாடுவோம்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment