Thursday, October 8, 2015

சூழலில் சுவாரஸியம்..

கண்களை கசக்கிகொண்டே, பீர் குடித்துக்கொண்டிருந்த கூட்டத்தில் ஆரஞ்சு ஜூசை வைத்திருந்த அப்பா ஹமீதை ஏறிட்டான் ஐந்து வயது மகன் சாதிக்.

யாருப்பா  கடவுள்?  குழந்தை மொழியை கேட்ட மாத்திரத்தில், கூட்டத்திலிருந்த ஜோசப்பும், ராமுவும்  பீர் பாட்டிலை ஸ்லோ மோஷனில் இரக்க, அப்பா ஹமீது தொடர்ந்தார். 

அப்பாதான் ஆல்ரெடி சொல்லியிருக்கேனே செல்லம்.. ஏன் திடீர்னு கேக்குறிங்க?..
சாதிக் (கூட்டத்திலிருந்த இன்னொரு பொடியனை கைகாட்டி..)  இல்லப்பா.. தாமஸ் சொல்றான் ஜீசஸ்தான் கடவுள்னு..

மகன் பெயர் கேட்டவுடன் அப்பா ஜோசப் ஆஜராக,  சிக்கனை கடித்துக்கொண்டே சூழலில் சுவாரசியமானான்  ராம்..

விளையாட தயாரானான் சாதிக்.. விடைபெற தயாரானார் ஹமீது..

Religion teaches you to be satisfied with non-answers. It's a sort of crime against childhood. Richard Dawkins

No comments:

Post a Comment