மழையே மழையே போதுமடி..
மனுசன மன்னிச்சு போயிருடி..
தெக்கே விவசாயி
காத்திருக்க..
வேண்டாதார் வீட்டுக்குள்ள
நீ போகும்
நியாயம் என்ன..
படகெல்லாம் பஸ்ஸாச்சே
பணமெல்லாம் பொய்யாச்சே
அக்கம் பக்கம் வேணுமுன்னு
அப்ப்பார்ட்மெண்டும் நினைச்சாச்சே..
பொறந்தயிடம் திரும்பி போக
மனுஷப்பய நினைக்கிறப்ப
இருந்த எடம் தேடி வரும்
உன்ன யாரு தடுக்குறது..
விட்டத மீட்டு போக
வீறு கொண்டு வந்தாயோ
பட்டுன்னு கோவப்பட்டு
பழி வாங்க வந்தாயோ..
தாகம் தாகமுன்னு
தவிச்ச வாயெல்லாம்
போதும் போதுமுன்னு
கையெடுத்து கும்புடுதே..
மழையே மழையே போதுமடி..
மனுசன மன்னிச்சு போயிருடி..

No comments:
Post a Comment