Friday, March 31, 2017

வாட்ஸுப் மனிதர்கள்..

சிக்னலின் சிவப்பும் வாட்ஸுப் பச்சையும் ஒரே நேரத்தில் ஒளியை உமிழ, அனிச்சையாய்  கயலின் கால், கார் பிரேக்கையும், கை வாட்ஸுப்பையும் அழுத்தியது.

அபாயம் சுமந்து வரும் ஆம்புலன்ஸ் போல, வாட்ஸுப்,  ராஜனின் பதிவை அலாரம் அடித்து காண்பித்தது. கண நேரத்தில் கண்களை கடந்த செய்தி, மூளையால் சலவை செய்யப்பட்டு, கயல் இதயம் படபடத்தாள். சிக்னல் பச்சையை காட்டி சிரித்தது.

வாட்ஸுப்.
மனிதர்களுக்குதான் எத்தனை சுயதம்பட்டம். எத்தனை அவசரம். எத்தனை வன்மம்.  எத்தனை பதிவுகள் தன் இருப்பை நிறுத்த. எத்தனை பதிவுகள் பிறர் இருப்பை குலைக்க.

லிப்ட் பட்டனை அழுத்தும் போது, கோபங்கள் எல்லாம் வார்தைகளாகி வாட்ஸுப் பதிவு புறப்பட தயாராகி இருந்தது. லிப்ட் கதவுகள் மெதுவாய் மூடிக்கொண்டிருக்க திடீரென்று ஒரு கை உள்ளே நீண்டது.

"யாருடா இவன்" என்பது போல லிப்ட், தன் கதவை திறக்க, வாட்ஸுப்பில்   பதிவிட்டுக்கொண்டே உள்ளே வந்தான் சரவணன்.

இயந்திர மனிதர்களை சுமந்தே அலுப்பானதால், இம்முறை இறுக்கமாய் கதவுகளை மூடியது லிப்ட்.

No comments:

Post a Comment