Saturday, April 1, 2017

பீலிங் பிஸி..

தினம் ஒன்றை
பார்வேர்ட் செய்து
நானும் இருக்கிறேன்
என்றேன்.

எவர் பகிர்ந்ததையோ
நான் பகிர்ந்து
நானும் அவரும்
ஒன்று என்றேன்.

நான் சென்ற
இடங்களை எல்லாம்
TAG செய்து
நான் ஊர் சுற்றி
என்றேன்.

சாப்பிடுவதை
போட்டோ போட்டு
நான் புட் லவ்வர்
என்றேன்.

கட்சி
கருத்துக்களை
பகிர்ந்து
எனக்கும் அரசியல்
தெரியும் என்றேன்.

சினிமா
விமர்ச்சனம்
பகிர்ந்து
வேர்ல்ட் சினிமா
தெரியும் என்றேன்.

ரத்தம் தேவை
பகிர்வதவன் மூலம்
நான் இரக்கமானவன்
என்றேன்.

அனைத்தையும்
பொறுமையாய்
கவனித்த facebook
வாட்ஸ் ஆன் யுவர் மைண்ட்
என்றது ?

நான் பீலிங் பிஸி என்று
போஸ்ட் செய்தேன்..

No comments:

Post a Comment