இல்லறத்தில்
காமக் கண் மறைந்து
காதல் கண் தெரியும் போது
ஆண்
இரண்டாம் முறை
பிறக்கிறான்..
இயலே
இனியவளே
எனக்கு வாய்த்த
வரமே..
நான் இளைப்பாறும்
மரமே..
உன்னோடு
நானும்
வளர்ந்து கொண்டே
இருக்கிறேன்..
உன்
நினைவாற்றலும்
முதிர்ச்சியும்
கருணையும்
கனிவும்
நித்தம்
எனை
உன் மேல்
பித்துக்கொள்ள
வைக்கிறது..
நீ கற்பதை போலவே
கற்றுக்கொடுப்பதிலும்
கெட்டிகாரி..
நான் வேண்டுவதெல்லம்
உனை பார்த்து ரசிக்க
என் கண்களும்..
சேர்த்து நடக்க
என்
கால்களும் தான்.
இசையே
என்
இளையவளே ,
இனியவளே..
நான் இளைப்பாறும்
மரமே,
நிதம்
பூக்கும் போவே.
முத்தம் தரும்
பனியே..
நெஞ்சில்
உறங்கும்
நிலவே..
வாழ்வுக்கான
சுவையே..
வார்த்தைகளின்
குறும்பே..
நித்தம் நித்தம்
உனை என்
முத்தத்தால்
நிறைத்தாலும்
வற்றாமல்
நிறைகிறது
என் சொர்கம்..
எனதென்றும்
உனதென்றும்
ஒன்றுமில்லா
நம் இல்லறம்
நிச்சயம்
நீயின்றி
சாத்தியமில்லை..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
Thank you for being the amazing woman you are. Wishing you the happiest of birthdays, filled with love, laughter, and all the happiness you deserve.
நீ நான் நீங்கி
நாம் வாழும்
இந்த இனிய
இல்லறத்தில்
சிட்டுக்குருவிகளாய்
பறந்த
இப்பத்தாண்டுகள்
நம் நினைவுச் சேகரங்களில்
நிச்சயம் ஒரு மைல் கல்..
இல்லறத்தில் இணை
மனிதனுக்கு முளைக்கும்
மாயச்சிறகு..
வா..
மீதமுள்ள வானப்பெருவெளியை
நம் வண்ணச்சிறகுகளால்
மெல்லக் கடப்போம்..
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..
அகம் அறிந்து
பிடித்தவை தெரிந்து
புதியவை புழங்கி
புறம் பழகி
பொறுப்புகள் புரிந்து
தீயவை விளக்கி
நல்லவை நாடி
தன்னை தானே
வடிவமைத்து
வாழும்
மனிதர்கள்
எந்நாளும்
அழகானவர்கள்..
உன்னை போல..
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்..
அன்புள்ள அப்பா ,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
தொலைதூர வாழ்க்கை
எல்லா வனப்புகளை
தந்தாலும்
உங்களை விட்டு
விலகி வாழ்வது
என்றும்
வருத்தமே..
உங்களை
சந்திப்பதற்கான
ஆயத்தத்தில்
நகர்கின்றன
நாளும்
பொழுதுகளும்..
இந்த ஆண்டு
டிசம்பரில்
உறுதியாக
சந்திப்போம்
என்ற தகவலோடு
மீண்டும்
இனிய
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்..
இப்பிறந்த நாளில்
நான் வேண்டுவதெல்லாம்
உங்கள்
பூரண
உடல் நலமும்
மனநலம்
மட்டும்தான்..
என்றென்றும்
மனம் கொள்ளா
பிரியங்களுடன்
உங்கள்
மகன்..