டெஞ்சர் - மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் கடவுள். இங்கு புல்லும் மேய்ச்சல் நிலமும் தான் பெரிய உயிர்கள். மங்கோலியர்களுக்கு புல்லை விட எதுவும் இரக்கத்திற்கு உரியதல்ல.
ஓநாய்கள் - மாயாஜால மிருகங்கள். மேய்ச்சல் நில காவலர்கள். குலச்சின்னம். உலகம் வென்ற ஜெங்கிஸ்கான் போர் கலைகளை ஓநாய்களுடமிருந்துதான் கற்றிருக்க கூடும்.
ஓநாய்களின் ஆளுமை வசியத்திற்கு ஆட்ப்பட்டு, ஓநாய் குட்டியை வளர்ந்து, அதை அவனே கொன்ற ஒரு சீனனின் கண்ணீர் களம்.
கதை முழுதும் ஆளுமை செய்கிற, நம் கண் முன்னே வீரனாகவும், விவேகியாகவும் வந்து பதிகிற ஓநாய்கள். குட்டியாய் கதையில் வந்து, நாய்களை போல் அடிமையாய் வாழாமல், சுதந்திரத்திக்காய் உயிரையும் விடுகிற ஓநாய்.
வேட்டை நாய்க்கள், மர்மோட்டுகள், முயல், எலி, குதிரை, ஆடு, அன்னம், காட்டு வாத்து என ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லிப் காணாமல் போகும் சோகம்.
மேலே சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும், மெல்லமாக படுகொலை செய்த நவீனத்துவத்தின் வன்முறை.. மனிதனே பிரதானமானவன் என்கிற மாவோவின் சிந்தனை..
கதை வழியே காட்சி படுத்த பழகிவிட்டால், ஓநாய் குலச்சின்னம் நிச்சயம் ஒரு தவிர்க்க முடியாத வாசிப்பு அனுபவம்..

No comments:
Post a Comment