Wednesday, April 3, 2013

கல்யாணம் பேசயிலே பொசுக்குன்னு பூத்திருசே..



பொத்திவச்ச ஆசையெல்லாம் பிச்சிகிட்டு பாயுதடி..
பாறைன்னு நினைச்ச நெஞ்சு உன் பார்வைக்குத்தான் ஏங்குதடி..

முட்ட கரியின்னு மூணு வேல திங்கிறவன் 
மூணு இட்லிய முழுசா தாண்டலையே..

வாயெல்லாம் பல்லாச்சே.. வயசுக்கு வந்து நாளாச்சே
முத்தம் கொடுக்கிரதுக்கே முப்பது வயசாச்சே..

வண்டி மாடாட்டம் ஊர் ஊரா சுத்தறவன்
சண்டி மாடாட்டம் உன்ன மட்டும் சுத்துரேனே..

உள்ளங்கைய தொட்டதுக்கே உடம்பெல்லாம் சிலுக்குதேடி.. 
உள்ளத பாத்துபுட்டா உயிருக்கு என்னாகும் ?

காமா சோமான்னு கண்டதெல்லாம் பேசுறவன்..
கண்ணே மணியேன்னு கவிதையிலகொஞ்சிரனே..

காதல் கடுசுன்னு காலமெல்லாம்  நினைச்சிருந்தேன் 
கல்யாணம் பேசயிலே பொசுக்குன்னு பூத்திருச்சே..

காஞ்ச  மாடாட்டம் கம்புல நான் பாயுறனே
 கனிஞ்ச கொடியே நீ காயம் படாம பாத்துக்கடி..

Saturday, March 16, 2013

மனநலம்..

உலகம்  உங்களின் கருத்துக்காக காத்திருப்பதாக தோன்றுகிறதா ?

உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை கவர்வதாக எண்ணுகிறீர்களா ?

மனதில் நினைப்பதை எல்லாம் பகிரும் பழக்கம் உடையவரா நீங்கள் ?

தீடீரென்று உங்கள் நண்பர் முட்டாளாய் தோன்றுகிறாரா ?

உலகம் பற்றிய உங்கள் கருத்து நாளுக்கு நாள் உறுதியாகி கொண்டே போகிறதா ?

நினைத்ததை செய்வதில் என்ன தவறென்று அடிக்கடி நினைகிறீர்களா ?

குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு, பொருளாதார கோட்பாடு எல்லாவற்றிலும் குறை இருபதாக தோன்றுகிறதா ?

நீங்கள் படத்துக்கு போனதையும், பாருக்கு போனதையும் வீடு திரும்பி வருவதற்குள் எல்லோருக்கும் சொல்ல நினைகிறீர்களா ?

சில நேரங்களில் எல்லோரும்உங்களை புகழ்வதாகவும், பல நேரங்களில் உங்கள் கருத்துக்கள் மற்றவர்களுக்கு புரியவில்லை என்றும் நினைகிறீர்களா ?


நீங்கள் அழகானவரென்றும், நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் தனித்துவம்
பெற்றிப்பதாகவும் உணருகிறீர்களா?

நீங்கள் facebook யூசராக இல்லையெனில் நல்ல மனநல மருத்துவரை அணுகுங்கள்.

http://www.coolpctips.com/2012/10/facebook-addiction-disorder/

Friday, March 15, 2013

அன்புள்ள அண்ணனுக்கு..


அன்புள்ள அண்ணனுக்கு,

              மணமான இந்நாளில் எனக்கு நண்பனாக , அன்பனாக, பாதுகாவலனாக,
சகோதரனாக என்னோடு நீ வாழ்ந்த எல்லா தருணங்களையும் பொக்கிஷமாக என்னுடன் எடுத்து செல்கிறேன்.
         
           நீ உன் அன்பை வெளிப்படுத்த எனக்கு கொடுத்து கொண்டே இருகிறாய், எல்லாவற்றையும், எனக்கான கணவனையும். எனக்குள் நிறைந்து கிடப்பது நீ மட்டும் அல்ல, உன்னை பற்றிய உன் நினைவுகளும் தான்..

            இன்னும் நினைவிருகிறது,  என்னுடைய மூன்றாம் வயதில் அப்பாவும் அம்மாவும் வெளியில் சென்ற மழைத் தருணங்களில், இடிக்கு பயந்து நீ கதவுக்கு பின் ஒளிந்ததும், உனக்கு பின்னே நான் ஒளிந்து கொண்டதும்..

            எல்லா உறவுகளும் காலத்தால் மாறும் என்ற உன் சித்தாந்த கருத்தை, இந்த சமுதாய சிறைக்குள் வளர்க்கப்பட்ட நான், என்ன சொல்லி இல்லை என்பது.

            நீ என்னோடு முரண்பட்ட எல்லா தருணங்களும், அது என் பாதுகாப்பு பற்றிய உன் வருத்தங்கள் என்பதை நினைக்கும் போதெல்லாம் வலிக்கிறது.

           நான் உன் வாழ்கையின் வழிமுட்டி நின்றவளாகவே நினைக்கிறேன், இந்நாளில் உனக்கு வழிவிட்டு போகிறேன் உனக்கான உன் வாழ்கையை வாழ.

             அடுத்த ஜென்மம் ஒன்று இருப்பின் அதில் உன் மகளாக பிறக்க வேண்டும் என்ற என் ஆசையை பதிவு செய்து, இந்த ஜென்மத்தில் என் பிராத்தனைகளை மட்டுமே உனக்கு பரிசளித்து, பிரியா விடை பெறுகிறேன்.

                                                                                             உன் பிரியமுள்ள தங்கை..


Thursday, March 7, 2013

இல்லை.. இல்லை.. இல்லை


அறிவு என்பது பணம் சம்பாதிப்பது இல்லை

ஆளுமை என்பது மிரட்டுவது இல்லை

அழகு என்பது உருவம் இல்லை..

படிப்பு என்பது மனனம் செய்வது இல்லை

பாசம் என்பது விட்டுகொடுப்பது  இல்லை

மரியாதை என்பது பணிய வேண்டும் என்பதில்லை

இரக்கம் என்பது பிச்சை இடுவது இல்லை 

வசதி என்பது கார் வைத்திருப்பது இல்லை

வருத்தம் என்பது அழுவது இல்லை 

சந்தோசம் என்பது சிரித்துக்கொண்டிருப்பது மட்டும் இல்லை 

.இலக்குகள் என்பது இறுதி இல்லை.

ஆச்சரிய குறி!



இங்குதான் ஆண் தனக்கான துணையை 
தன்னை தவிர அனைவரையும் வைத்து தீர்மானிக்கிறான்..

இங்குதான் திருமணத்தில் பெண்களை வாங்குவதற்கு
ஆண்கள் விலை பெறுகிறார்கள்

இங்குதான் ஆண் பெண்இன்பம் பெறுவதற்கு 
ஆண்களுக்கு விலை கொடுக்கபடுகிறது..

இங்குதான் மருமகள் பிள்ளை பெற்றதற்கு    
மாமனார் பவுன் நிர்ணயிக்கிறார்

இங்குதான் எல்லா முறைகளிலும்/வழக்கங்களிலும் ஆண் வீடுகள் 
வாங்குபவர்கலாகவே இருகிறார்கள்..

இங்குதான் பெண்ணுரிமைகள் 
ஆண்களால் மட்டுமே வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது..

இங்குதான் 30 வயதிலும், ஆண்கள் 
அம்மாவிடம் பால்குடி மறவாத பாலகர்கலாகவே இருகிறார்கள்..

இங்குதான் பாசத்திற்கு ஆண்கள் 
தன்மானத்தை அடகு வைகிறார்கள்..

இங்குதான் ஆண்குறி ஆச்சரியகுரியாகவே இருக்கிறது...

இப்படிக்கு 
இந்த நூற்றாண்டின் பெரியார் ரசிகன்..

Wednesday, February 13, 2013

இப்படிக்கு காதல்..

அழகானவற்றின் வரிசையில்
இன்றும் எழுதி கொண்டிருக்கிறேன்
உன் பெயரை...


நான் உன்னை நினைத்துக்கொண்டு இருப்பதை விட 
அழகாய் இருக்கிறது..
நீ என்னைத்தான் 
நினைதுக்கொண்டிருப்பாய்
என்று நினைத்துக்கொள்வது..
காதல்  தொடர்கதை..

எப்போதாவது நம் இரண்டு குடும்பங்களும்
சந்திக்கும் வேளைகளில்..
நீ என் மனைவி அழகாய் இருக்கிறாள் 
என்று சொல்வதும்..
நான்  உன் கணவன் நல்லவனாய் இருக்கிறான் 
என்று சொல்வதும்..



 காதல் ஒரு கனவு 
சிலருக்கு பலிக்கும்..
பலருக்கு வலிக்கும்..


உன்னை போலவே அழகு..
உன்னை போலவே சிரிப்பு..
உன்னை போலவே கவிதை நடை..
ஆனால்
என்னை போலவே எப்போதும்
அழுது கொண்டு இருக்கிறது
உன் குழந்தை..





 மத்தாப்பாய் சிரிக்கிறாய்
தீபாவளியில்..
கரும்பாய் இனிக்கிறாய் 
பொங்கலில்..
பூவாய் பூக்கிறாய் 
புத்தாண்டில்..
இன்று காதலர் தினம்..
உன் காதலை சொல்..
இல்லையேல்..
உன்னை காதலிக்கவாவது  சொல்..


Friday, January 4, 2013

ரெண்டு வயசு பொண்ணு..



முழுசா   வயசு ரெண்டாச்சு முன் பல்லு ரெண்டும் முளச்சாச்சு
முழுசா பேச நாளாச்சு ..முயன்று நானும் ஜெயிச்சாச்சு..
கன்ன கசக்கிக்கிட்டு கண்மணி நான் வந்திருக்கேன் 
காத்திருந்து பெத்தவளே.. கண்டுக்காம நிக்கிறியே..

அப்பா வந்தானே..அன்பு முத்தம் தந்தானே..அரைநிமிஷம்னு சொல்லிப்பிட்டு ஆபீசுக்கு போறானே..அரையும் முழுசாச்சு.. சூரியனும் நிலவாச்சு..
இப்பவும் முளிசிருக்கேன்.. இன்னும் திரும்பலையே..

அய்யா வந்தாரே..  ஆப்பில் வாங்கி தந்தாரே..முள்ளு மீசையில முத்தம்தான் கொடுத்தாரே..கண்ணத்த நகத்திபுட்டு  என்னன்னு கேட்டதுக்கு.. 
முரட்டு மீசையின்னு முறுக்கிக்கிட்டு சிரிக்கிறாரே..

மாமா வந்தானே.. காட்பரீசு தந்தானே..
கட்டிபுடிச்சு என்ன.. கட்டிக்கிற கேக்குறானே..
நீயா நானா-ன்னு நித்தம் ஒன்னு பாத்தாலும்
மாமா இவனுக்கு மண்டையில ஏராதா..

ஆச்சி வந்தாளே.. ஆசீர்வாதம் தந்தாளே..இன்னும் கொஞ்சம் வாங்கிவர கோயிலுக்கு போனாளே..சும்மா போனா  நான் சுகமா இருந்திருப்பேன்..
எனக்கு சேத்துன்னு இடுப்புல ஏத்துறாளே..
கண்ணு கும்பிடுன்னு கருங்கல்ல காட்டிபுட்டு..
பொம்மைன்னு சொன்னதுக்கு கண்ணத்துல போடுறாளே..

கண்ணே மணியேன்னு..காலமெல்லாம் கொஞ்சுறியே..
என் கன்னம் படும் பாடு உன் காதுக்குதான் கேக்கலையா..

கன்ன கசக்கிக்கிட்டு கண்மணி நான் வந்திருக்கேன்
காத்திருந்து பெத்தவளே.. கண்டுக்காம நிக்கிறியே..