Wednesday, April 6, 2016

நான் (ம்) தமிழர் வாக்காளன்..

அறம் சார்ந்த
அரசியலை
முன்னெடுக்கும்
முயற்சிக்காகவும்
முழக்கத்துக்காகவும்
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

சாதி மத சாக்கடை
அரசியலுக்கு நடுவே
மொழிகொண்டு எம்
மக்களை மீட்கப்போராடும்
மதி என்னை ஈர்பதால்
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

பெயரளவில்
மாற்றம் பேசும்
கட்சிகளுக்கு
நடுவே
செயல் வடிவில்
கூட்டங்களில் மாற்றம்
காட்டும் மாற்றுக்காக
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

ஓட்டுக்காக 
பணம் கொடுத்து 
பிச்சை  எடுக்கிற 
வேட்பாளர்களுக்கு 
நடுவே 
என் கருத்தியலில் 
உடன்பாடு 
இல்லையெனில் 
உன் ஓட்டு எனக்கு தீட்டு 
என்று சொல்லும் 
தைரியத்திற்காக 
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

ஊழல் கறைபடிந்த 
வேட்டிகளுக்கு நடுவே 
கறை படியாத 
கரங்களோடு 
போட்டியிடும்  
எம் இளந் தலைமுறை 
வேட்பாளர்களுக்காக 
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

கொள்கை 
முரண்பாடுகளோடு 
கூட்டணி கட்சிகள் 
தேர்தல் அறிக்கை படிக்க  ..
இதுவரை தமிழ்நாடு 
கண்டிறாத 
செயல் திட்ட வரைவை 
செய்தியாக்கியதற்காக..
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

செந்தமிழின் சுவை பேசி 
வள்ளுவனின் குறள் படித்து 
பாவேந்தனின் பாட்டுப் பாடி 
என்னில் 
மறக்கடிக்கப்பட்ட தமிழை 
மீட்டுருவம் செய்யும் 
முயற்சிக்காக 
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

உலகத்தின் வெவ்வேறு 
தேசங்களில் பரவி வாழும் 
ஒவ்வொரு தமிழனையும்
ஒருங்கிணைக்கும் 
முயற்சிக்காக 
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

நாமே இந்த அரசியலுக்கு மாற்று
நாம் தமிழரே...
இந்த அரசியலை மாற்று..

                                            --இப்படிக்கு
                   நாம் தமிழர் வாக்காளன்..

Tuesday, April 5, 2016

என் கருத்துச் சுதந்திரம்..

நெருப்பாய் இரு..
இல்லை
நீராய் இரு..
இரண்டுக்கும் நடுவே
இழுபறியாய்
இருப்பதை விட
இறப்பது சிறப்பு

தவறாகவேனும்
ஒரு கருத்து
வைத்துக்கொள்.
கருத்தில்லாமல்
இருப்பது
உயிரில்லாமல்
வாழ்வதற்கு சமம்.

கருத்துக்கள்
பகிரப்படும்போது
ஒன்று வெளிப்படையாய் ஆதரி
அல்லது எதிர்.
இது கருத்துக்களை விட
உன்னை பரிசீலிக்க
உதவும்

குற்றவாளி
தவறு செய்கிறவன்
மட்டுமல்ல.
கருத்துச்சொல்ல
தகுதியிருந்து
தவறியவனும்தான்

நீ கலந்துரையாட
தாயரானால்
பேசுவதற்கு முன்
கேள்..
கேட்பதற்கு முன்
யோசி.

உன் கருத்தை
பேசாமல்
பிரச்சனையை
தீர்ப்பதை விட
உன் கருத்தை
பதிவிட்டு
பிரச்சனையை
வளர்ப்பது உயர்வு.



Friday, February 19, 2016

தமிழர் அரசியல்..

நாம் தமிழர்
புரட்சியால்
வெடித்துக்கொண்டிருக்கிறது
தமிழகம் அங்கே..

நாம் தமிழர்
நேசனாய்
என்ன செய்வேன்
நான் மட்டும்
இங்கே..

கடல்கடந்த
அந்நிய தேசத்தில்
கனொலிகளின் காட்சியை
பகிர்வதை விட..
என்ன செய்து விட
முடியும் என்னால்  ??

முடியும்..

நம்மால்  முடியும்..

குடும்பம் வழியே
 எண்ணங்களை
ஒட்டுகளாய் மாற்று..

ஒன்று ஆறாகும்
ஆறு நூறாகும்..
நூறு ஆயிரமாகும்
ஆயிரம் அதிகாரமாகும்..

சுயநலமில்லாத சர்வாதிகார
தமிழர் ஆளும் ..
தமிழகம் திரும்ப
தயாராவோம்.

Sunday, February 14, 2016

காதலர் தின வாழ்த்துக்கள்

என் வாழ்க்கைக்கான
பதிவுகளின் தொடக்கம்
 உன்
வாழ்த்துகளுக்கான
ஒவ்வொரு
வார்த்தை
சேகரிப்பிலும்
தொடங்குகிறது..

நெடுந்தூரம்
உன் நினைவுகளில் 
பயணித்து 
அயற்சியாகும் பொழுதெல்லாம்..
நீ வண்ணமென
வந்துபோகும்
மின்னல் இடைவெளியை 
அசைபோட்டே
மகிழ்ச்சியாகிறேன்..

காதல்
தோல்விகளில்தான்
கவிதைகள் 
அழகாகுமாம்..
எனக்கு மட்டும்
ஏன் இந்த விதிவிலக்கு..
என் கவிதைகள்
மட்டும்
எப்போதுமே
அழுகையாகிறது..


காதலர் தின வாழ்த்துக்கள்....



Sunday, January 17, 2016

ஜல்லிக்கட்டு..

விலங்கு நல உரிமை பேசும் 
எந்த நாக்கும் இறைச்சி 
விற்பனையை விலக்கியதாய் 
தெரியவில்லை.

அரசியல் ஆதாயம் 
தேடாத  எந்த கட்சியும் 
ஜல்லிகட்டை  ஆதரித்ததாய் 
தெரியவில்லை..

நீதி அரசர்களின் 
விவாதங்களில் கூட 
காளைகள் கட்சிபொருளா 
இல்லையா என்பதை 
தாண்டவில்லை..

என்ன உண்ண வேண்டும் 
என்ன உடுக்க வேண்டும் 
எங்கு படுக்க வேண்டும் 
என்று தீர்மானிப்பதை
அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு..

ஜல்லிக்கட்டு விளையாட 
வேண்டுமென்று  
அடம் பிடிப்பது மட்டும் தான் 
இன்று 

தமிழர் உரிமை..

பொறு.. 
அதையும் அவர்களே 
சொல்வார்கள்..

எப்படி விரும்பாமல் 
ஒவ்வொன்றையும் 
பழகிக்கொண்டாயோ 
இதையும் 
பழகிக்கொள்வாய்..

நான் ஏன் ???

                                            புலி வருது கதையா.. ஆறு வருசம் விசா முடிஞ்சு சென்னைக்கு திரும்ப தயாரானான் நலன். தயக்கதுடனே தயாரானாள் மனைவி அருள்மொழி. ஆறுவருட போதனையை அவன் அரை நாழி கூட யோசிக்கவில்லை என்பது அவளுக்கு சற்றே வருத்தம் தான். என்ன செய்ய, இடம் பெயர்ந்து பழகப்பட்ட பெண்ணினத்திற்கு இதெல்லாம் பழசு என்று புலம்பிக்கொண்டே ஆறுதல் அடைந்தாள்..


                                        இருந்தா..நம்ம நலன் சார் மாதிரி இருக்கணும்டா .. வந்தாரு.. ஆறு வருஷம் நல்லா சம்பாரிச்சுட்டு.. இந்தியா போறாரு.. புதிதாய் அமெரிக்கா வந்த  அலுவலக கத்துக்குட்டிகளின் ஓய்வு நேர பேச்சு, நலனுக்கு உற்சாகம்  அளிக்காமல் இல்லை.. இருந்தாலும் அவன் மட்டுமே அறிந்த கசப்பான உண்மையை, கார்பரேட் புன்னகையில் புதைத்து விட்டு விடை பெற்றான்..


                       சென்னை விமானத்தில் ஏறி, கண்மூடிய நேரத்தில் ஆரம்பமானது, எப்போதுமே அவனை விரட்டிகொண்டிருக்கும் அந்த கேள்வி..




                     நான்  ஏன் ..................................................?????

Thursday, December 31, 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்

செய்வன திருந்த செய்
சேரிடம் அறிந்து சேர் 
ஊக்கமது கைவிடேல்
நூல் பல கல் 
கேள்வி முயல் 
பழிப்பன பகரேல் 
மிகைபடச்  சொல்லேல் 
சோம்பித் திரியேல் 
வித்தை விரும்பு 
வல்லமை பேசேல் 
நேர்பட ஒழுகு...
இணக்கம் அறிந்து இணங்கு..