Tuesday, April 5, 2016

என் கருத்துச் சுதந்திரம்..

நெருப்பாய் இரு..
இல்லை
நீராய் இரு..
இரண்டுக்கும் நடுவே
இழுபறியாய்
இருப்பதை விட
இறப்பது சிறப்பு

தவறாகவேனும்
ஒரு கருத்து
வைத்துக்கொள்.
கருத்தில்லாமல்
இருப்பது
உயிரில்லாமல்
வாழ்வதற்கு சமம்.

கருத்துக்கள்
பகிரப்படும்போது
ஒன்று வெளிப்படையாய் ஆதரி
அல்லது எதிர்.
இது கருத்துக்களை விட
உன்னை பரிசீலிக்க
உதவும்

குற்றவாளி
தவறு செய்கிறவன்
மட்டுமல்ல.
கருத்துச்சொல்ல
தகுதியிருந்து
தவறியவனும்தான்

நீ கலந்துரையாட
தாயரானால்
பேசுவதற்கு முன்
கேள்..
கேட்பதற்கு முன்
யோசி.

உன் கருத்தை
பேசாமல்
பிரச்சனையை
தீர்ப்பதை விட
உன் கருத்தை
பதிவிட்டு
பிரச்சனையை
வளர்ப்பது உயர்வு.



No comments:

Post a Comment