Monday, May 6, 2013

இது கவிதை காலம்..

உன்னுடன் என்
இதயம் பேசும் உரையாடல்கள்
கவிதையாய் கசிகிறது காகிதத்தில்

எழுதப்படாத கவிதைகளாய்
நிறைந்து கொண்டே இருகிறாய்
என் இதயத்தில்..





பிறந்ததின் பயனை அடைந்ததாய்
கட்டிலில் கசங்கி கிடக்கிறது
நீ கழட்டி எறிந்த சேலை..

வெட்கப்படாதே..
உன் கண்ணங்கள் மேலும் அழகாகும்..
அது என் கவிதையை மேலும் அழகாக்கும்..








ஒவ்வொரு முறை உன் செல்பேசி அழைப்பை
துண்டிக்கும் போதும்
இறந்து பிறக்கிறது என் இதயம்..




நீ ருசிப்பதர்காகவே
இவ்வுலகில் உயிர் துறக்கின்றன
கோழிகள்..






ஐயோ..
சீ..
போங்க..
இதைவிட இதயத்திற்கு நெருக்கமான
வார்த்தைகள் கண்டறியப்படவே இல்லை..








ஊர் சுற்றி திரிகிறது
என் கவிதை
என்னவள்..









வெயிலுக்கு ஒரு வேண்டுகோள்
என்னவள் வெளியில் வருகிறாள்..
வேண்டுமானால் என்னை எரித்துக்கொள்..






உன்னோடு உரையாடாத இரவுகள்
நான்  நரகத்தில் பயணப்பட்ட பொழுதுகள்..













நிரம்பி வழிகிறது காதல்
தாகத்தில் தவிக்கிறேன் நான்.
உன் எச்சில் முத்தம் தா
முடித்து கொள்கிறேன் என் விரதத்தை





மழைத்துளியாய் மாறத் தானடி
நினைக்கிறேன்
உன் மேனி நனைக்க..
என்ன செய்வது...
எல்லாவற்றையும் எரித்துவிடுகிறது
உன்னை நினைக்கும் போதான என் வெப்பம்..



உன் புகைப்படத்தை முத்தமிட்டுத்தான்
உடைகின்றன..
என் மோகக்குமிழிகள்..




சேலை கட்டிய சித்திரம்
பேசுமா ?
என்னவள் பேசுகிறாள்..




யார் பேசியும் கலைய மறுக்கிறது..
உன்னை பற்றிய என் கனவு..






ஆச்சர்யம்!!!
உன்னை பற்றிய
என் புலம்பல்கள் எல்லாம்
கவிதையாகி போனது..


உன் புகைப்படம் பார்க்கும் போதெல்லாம்
படம் பிடிக்கிறது என் மனது..






என்னை கேட்காமல்
எப்படி எடுத்துக்கொண்டாய் ?
என் நாட்களின்
ஆரம்பம், முடிவு
இரண்டையும் முடிவு செய்யும் பொறுப்பை



உன்
பார்வைகளில் கரைந்து போவதற்கும்
வார்த்தைகளில் உறைந்து போவதற்கும்
வாழ்கையில் கவிதையாய் கலந்து போவதற்கும்
மடி சாய்ந்து உறங்கி போவதற்கும்
நீ
வரும் வழி நோக்கி காத்திருக்கிறேன்




Sunday, May 5, 2013

காதல் கனவுன்னு காலமெல்லாம் நினைச்சிருந்தேன்.. கல்யாணம் பேசயிலே பொசுக்குன்னு பூத்திருச்சே..



என் எழுதப்படாத கவிதையே..

இதயம் பேசும் உரையாடலே.

மோதி  உடையும் மோகக்குமிழியே..

படிக்க நினைக்கும் புத்தகமே..

மேனி நனைக்கும் மழைத்துளியே..

தேடிக் கிடைத்த புகைப்படமே..

என் தேடல் நிறைத்த உயிர்குடமே..



வா...

பார்வைகளில் கரைந்து போவோம்..

வார்த்தைகளில் உறைந்து போவோம்..

வாழ்கையில் கலந்து போவோம்..

காத்துக்கிடக்கும் உன் நெற்றிக்கு..

என் முத்தத்தில் பொட்டு வைத்து .

தொடங்குவோம் நம் மண நாளை..

Wednesday, April 3, 2013

கல்யாணம் பேசயிலே பொசுக்குன்னு பூத்திருசே..



பொத்திவச்ச ஆசையெல்லாம் பிச்சிகிட்டு பாயுதடி..
பாறைன்னு நினைச்ச நெஞ்சு உன் பார்வைக்குத்தான் ஏங்குதடி..

முட்ட கரியின்னு மூணு வேல திங்கிறவன் 
மூணு இட்லிய முழுசா தாண்டலையே..

வாயெல்லாம் பல்லாச்சே.. வயசுக்கு வந்து நாளாச்சே
முத்தம் கொடுக்கிரதுக்கே முப்பது வயசாச்சே..

வண்டி மாடாட்டம் ஊர் ஊரா சுத்தறவன்
சண்டி மாடாட்டம் உன்ன மட்டும் சுத்துரேனே..

உள்ளங்கைய தொட்டதுக்கே உடம்பெல்லாம் சிலுக்குதேடி.. 
உள்ளத பாத்துபுட்டா உயிருக்கு என்னாகும் ?

காமா சோமான்னு கண்டதெல்லாம் பேசுறவன்..
கண்ணே மணியேன்னு கவிதையிலகொஞ்சிரனே..

காதல் கடுசுன்னு காலமெல்லாம்  நினைச்சிருந்தேன் 
கல்யாணம் பேசயிலே பொசுக்குன்னு பூத்திருச்சே..

காஞ்ச  மாடாட்டம் கம்புல நான் பாயுறனே
 கனிஞ்ச கொடியே நீ காயம் படாம பாத்துக்கடி..

Saturday, March 16, 2013

மனநலம்..

உலகம்  உங்களின் கருத்துக்காக காத்திருப்பதாக தோன்றுகிறதா ?

உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களை கவர்வதாக எண்ணுகிறீர்களா ?

மனதில் நினைப்பதை எல்லாம் பகிரும் பழக்கம் உடையவரா நீங்கள் ?

தீடீரென்று உங்கள் நண்பர் முட்டாளாய் தோன்றுகிறாரா ?

உலகம் பற்றிய உங்கள் கருத்து நாளுக்கு நாள் உறுதியாகி கொண்டே போகிறதா ?

நினைத்ததை செய்வதில் என்ன தவறென்று அடிக்கடி நினைகிறீர்களா ?

குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு, பொருளாதார கோட்பாடு எல்லாவற்றிலும் குறை இருபதாக தோன்றுகிறதா ?

நீங்கள் படத்துக்கு போனதையும், பாருக்கு போனதையும் வீடு திரும்பி வருவதற்குள் எல்லோருக்கும் சொல்ல நினைகிறீர்களா ?

சில நேரங்களில் எல்லோரும்உங்களை புகழ்வதாகவும், பல நேரங்களில் உங்கள் கருத்துக்கள் மற்றவர்களுக்கு புரியவில்லை என்றும் நினைகிறீர்களா ?


நீங்கள் அழகானவரென்றும், நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் தனித்துவம்
பெற்றிப்பதாகவும் உணருகிறீர்களா?

நீங்கள் facebook யூசராக இல்லையெனில் நல்ல மனநல மருத்துவரை அணுகுங்கள்.

http://www.coolpctips.com/2012/10/facebook-addiction-disorder/

Friday, March 15, 2013

அன்புள்ள அண்ணனுக்கு..


அன்புள்ள அண்ணனுக்கு,

              மணமான இந்நாளில் எனக்கு நண்பனாக , அன்பனாக, பாதுகாவலனாக,
சகோதரனாக என்னோடு நீ வாழ்ந்த எல்லா தருணங்களையும் பொக்கிஷமாக என்னுடன் எடுத்து செல்கிறேன்.
         
           நீ உன் அன்பை வெளிப்படுத்த எனக்கு கொடுத்து கொண்டே இருகிறாய், எல்லாவற்றையும், எனக்கான கணவனையும். எனக்குள் நிறைந்து கிடப்பது நீ மட்டும் அல்ல, உன்னை பற்றிய உன் நினைவுகளும் தான்..

            இன்னும் நினைவிருகிறது,  என்னுடைய மூன்றாம் வயதில் அப்பாவும் அம்மாவும் வெளியில் சென்ற மழைத் தருணங்களில், இடிக்கு பயந்து நீ கதவுக்கு பின் ஒளிந்ததும், உனக்கு பின்னே நான் ஒளிந்து கொண்டதும்..

            எல்லா உறவுகளும் காலத்தால் மாறும் என்ற உன் சித்தாந்த கருத்தை, இந்த சமுதாய சிறைக்குள் வளர்க்கப்பட்ட நான், என்ன சொல்லி இல்லை என்பது.

            நீ என்னோடு முரண்பட்ட எல்லா தருணங்களும், அது என் பாதுகாப்பு பற்றிய உன் வருத்தங்கள் என்பதை நினைக்கும் போதெல்லாம் வலிக்கிறது.

           நான் உன் வாழ்கையின் வழிமுட்டி நின்றவளாகவே நினைக்கிறேன், இந்நாளில் உனக்கு வழிவிட்டு போகிறேன் உனக்கான உன் வாழ்கையை வாழ.

             அடுத்த ஜென்மம் ஒன்று இருப்பின் அதில் உன் மகளாக பிறக்க வேண்டும் என்ற என் ஆசையை பதிவு செய்து, இந்த ஜென்மத்தில் என் பிராத்தனைகளை மட்டுமே உனக்கு பரிசளித்து, பிரியா விடை பெறுகிறேன்.

                                                                                             உன் பிரியமுள்ள தங்கை..


Thursday, March 7, 2013

இல்லை.. இல்லை.. இல்லை


அறிவு என்பது பணம் சம்பாதிப்பது இல்லை

ஆளுமை என்பது மிரட்டுவது இல்லை

அழகு என்பது உருவம் இல்லை..

படிப்பு என்பது மனனம் செய்வது இல்லை

பாசம் என்பது விட்டுகொடுப்பது  இல்லை

மரியாதை என்பது பணிய வேண்டும் என்பதில்லை

இரக்கம் என்பது பிச்சை இடுவது இல்லை 

வசதி என்பது கார் வைத்திருப்பது இல்லை

வருத்தம் என்பது அழுவது இல்லை 

சந்தோசம் என்பது சிரித்துக்கொண்டிருப்பது மட்டும் இல்லை 

.இலக்குகள் என்பது இறுதி இல்லை.

ஆச்சரிய குறி!



இங்குதான் ஆண் தனக்கான துணையை 
தன்னை தவிர அனைவரையும் வைத்து தீர்மானிக்கிறான்..

இங்குதான் திருமணத்தில் பெண்களை வாங்குவதற்கு
ஆண்கள் விலை பெறுகிறார்கள்

இங்குதான் ஆண் பெண்இன்பம் பெறுவதற்கு 
ஆண்களுக்கு விலை கொடுக்கபடுகிறது..

இங்குதான் மருமகள் பிள்ளை பெற்றதற்கு    
மாமனார் பவுன் நிர்ணயிக்கிறார்

இங்குதான் எல்லா முறைகளிலும்/வழக்கங்களிலும் ஆண் வீடுகள் 
வாங்குபவர்கலாகவே இருகிறார்கள்..

இங்குதான் பெண்ணுரிமைகள் 
ஆண்களால் மட்டுமே வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது..

இங்குதான் 30 வயதிலும், ஆண்கள் 
அம்மாவிடம் பால்குடி மறவாத பாலகர்கலாகவே இருகிறார்கள்..

இங்குதான் பாசத்திற்கு ஆண்கள் 
தன்மானத்தை அடகு வைகிறார்கள்..

இங்குதான் ஆண்குறி ஆச்சரியகுரியாகவே இருக்கிறது...

இப்படிக்கு 
இந்த நூற்றாண்டின் பெரியார் ரசிகன்..