Saturday, October 4, 2025
Saturday, April 19, 2025
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகள்களே..
என் இனிய இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
உன் கனிவும், கருணையும் எந்நாளும் நிலைபெறட்டும் உன்னோடு..
இயலே, இசையே
என் வசந்தம் பரப்பும் வண்ணமே
வார்த்தைகளுக்கு கிட்டா வானமே
நித்தம் நித்தம் முத்தத்தால் நிறைத்தாலும்
நிறையாது என் மனமே..
நான் மகிழும் என் மகள்களே..
உங்கள்அறிவும், கருணையோடும் நீடூழி வாழ்க..
என் இயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
உன் அன்பும் அறிவும் உன்னை மகிழ்வோடு வழிநடத்தட்டும்..
Friday, February 7, 2025
திருமண அழைப்பு
-----------------1-------------------
கண்டங்கள் தாண்டி
கடல்கள் கடந்து
மேகம் நுழைந்து
வானம் பறந்து
வண்ணத்து பூச்சிகளாய்
வரவேற்கிறோம்.
உங்கள் மனங்கொள்ளா
பிரியங்களுடன்
மணமக்களாய் இணையட்டும்
எங்கள் மாமனும், மணிமேகலையும்
-----------------2-------------------
தோள்களில் சுமந்து
முத்தங்களில் நிறைத்து
சின்னச் சிறு கதைகள் சொல்லி
சித்திரம் சேர்ந்து வடித்து
நித்தம் வேடிக்கை காட்டி
தினமும் இனிப்பு ஊட்டி
அன்பால் அணைத்த
எங்கள் ஆருயிர் மாமன்,
சங்கம் வளர்த்த
சிங்க மதுரையில்
மாலையிடுகிறான்
மணிமேகலைக்கு.
வாருங்கள்
உங்கள் வரவுகளில்
பூக்கட்டும்
மணமக்களின்
மாங்கல்யம்..
---இயல் & இசை
Sunday, December 8, 2024
திருமணநாள் வாழ்த்துகள் ப்ரியா..
சிரித்து,
கதைத்து,
உண்டு,
உறங்கி,
கேளித்து,
களித்து,
பகிர்ந்து,
பரந்து,
தொடர்ந்து
வாழட்டும்..
நம்மோடு
நம்
நல்வாழ்க்கை..
இனிய 11வது திருமணநாள் வாழ்த்துக்கள்..
Sunday, November 17, 2024
அமரனுக்கு பிறகு..
படம் முழுக்க பழக்கப்பட்ட பார்வை..
இந்து எனக்கு புதிதானவள் அல்ல
அவள் மட்டுமீறிய காதலும்
புதிதில்லை எனக்கு..
அது எப்போதும் துரத்திக்கொண்டே
இருக்கும் பார்வை..
அது எந்நேரமும் கேட்டுக்கொண்டே
இருக்கும் குரல்..
என்னை விட்டு
விலகி நடக்க விரும்பா
நிழல் அது..
அது நெடுந்தூர உறவு
இல்லை எனக்கு..
யார் அவள்..
ஏன் இத்தனை
பரிச்சயம் எனக்கு..
இத்தனை நாளும்
புறந்தள்ளிய,
விடுபட நினைத்த
உணர்வுகள்
ஏன் எனக்கு
குற்ற உணர்வுகளாய்
தொக்கி நிர்கின்றன ?
நீண்ட நேரத்திற்கு
பிறகு
நெடுந் தேடலுக்கு
பிறகு
நெற்றிப் பொட்டில்
சட்டென
உரைத்தது
உன் பெயர்..
.
.
.
.
.
.
ப்ரியா..
Monday, October 14, 2024
இயலே..
இயலே
இனியவளே
எனக்கு வாய்த்த
வரமே..
நான் இளைப்பாறும்
மரமே..
உன்னோடு
நானும்
வளர்ந்து கொண்டே
இருக்கிறேன்..
உன்
நினைவாற்றலும்
முதிர்ச்சியும்
கருணையும்
கனிவும்
நித்தம்
எனை
உன் மேல்
பித்துக்கொள்ள
வைக்கிறது..
நீ கற்பதை போலவே
கற்றுக்கொடுப்பதிலும்
கெட்டிகாரி..
நான் வேண்டுவதெல்லம்
உனை பார்த்து ரசிக்க
என் கண்களும்..
சேர்த்து நடக்க
என்
கால்களும் தான்.