Saturday, May 14, 2016

மலரட்டும் மக்களுக்கான நல்லாட்சி...

கொத்துக் கொத்தாய்
கொன்று குவிக்கப்பட்ட
சொந்தங்களை
காப்பாற்ற முடியாத
குற்ற உணர்ச்சி
உனக்கு
இன்னும் இருக்குமானால்...

மானத் தமிழர்களை
மண்டியிடவைத்து
அடிமையாய்
அடிபணிய  கிடத்தியது
அவமானம் என்று
நீ
நினைப்பாயானால்

இந்த தேர்தலே
திமுக,
அதிமுகாவிற்கு
இறுதி ஊர்வலமாய்
இருக்கட்டும்..

ஓட்டுக்காக
நீ
அழுத்துகின்ற
அந்த பொத்தான்
வேட்டாய் மாறி
இவர்கள்
வெடித்துச் சிதறட்டும்..

மதுவும்,
லஞ்சமும்,
ஊழலும்,
சாதிய கொடுமையும்
இவர்களோடு சேர்த்து
மண்ணோடு மண்ணாய்
போகட்டும்..

மலரட்டும்
மக்களுக்கான
நல்லாட்சி
அதற்க்கு
நீ
போடும்
ஓட்டு
மட்டுமே
சாட்சி..

Tuesday, May 3, 2016

சூழ்ச்சி - ஆட்சி

நாம் தமிழரை எதிர்த்து
தங்களை அறிவு ஜீவிகளாக
கட்டிக்கொள்ள முற்படும்
இந்துத்துவ நண்பர்கள்
ஏன் பா.ஜ.காவை கூட பரிந்துரைக்க மறுக்கிறார்கள்?

இவங்களுக்கு நாகேஷ் மாதிரி
கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமோ?

நாம் தமிழரை எதிர்த்து
விஜயகாந்தை மறைமுகமாக
ஆதரிக்கும் மநகூ நண்பர்கள்
மனநிலை என்னவாக இருக்கும்?

மடையனாக இருந்தாலும் பரவாயில்லை
தமிழனாக மட்டும் இருந்து விட கூடாதென்றா ?

சூழ்ச்சி அறிவோம்..
ஆட்சி புரிவோம்..

நாம் தமிழர்

Thursday, April 21, 2016

சூடு, சொரண..

பொதுக்கூட்டத்தில் மேலும் இருவர் பலி..

செய்தியை படித்து விட்டு
சாதாரணமாய்
கடந்து போகிறோம் நாம்.

இறந்தவர்கள் 
நம் குடும்பத்தை
சேர்ந்தவராக
இருந்தால்
நம் கோபம்
என்னவாக இருக்கும் ?

உப்பு சிறிதேனும்
நம் உணவில்
சேர்த்துக்கொள்வது
உண்மையானால்..

ஓடுகிற குருதியில்
ஒருதுளி
சூடும், சொரணையும்
நமக்கு இருக்குமானால் ..

திராவிட அரசியலை
வேரோடு புதைத்து
இறந்தவர்களுக்கு
இரங்கல் செய்வோம்..







Wednesday, April 20, 2016

அரசியல் கழிவறை..

பொதுக் கழிவறையில்
இயற்கை உபாதைக்காக
ஒதுங்குகிறார்கள்
மூவர்..

உள்ளே நுழையக்கூட
முடியாமல்
ஓட்டம் பிடிக்கிறான்
ஒருவன்.

வரிசையில் நிற்கும்
தன் வாரிசுகளுக்காக
தண்ணீரை இறைத்து
சுத்தம் செய்ய
தயாராகிறான்
ஒருவன்.

மூக்கை பொத்திக்கொண்டு
சிறுநீர் கழித்தபடியே
சுத்தம் செய்பவனை
ஏளனம் செய்கிறான்
இன்னொருவன்..

இவர்களில்
நீங்கள் யாராய்
இருக்க போகிறீர்கள்..

அரசியலை
சுத்தம் செய்ய
நமக்கு
ஐந்து வருடங்களுக்கு
ஒரு முறைதான்
வாய்ப்பு.

நாம் தமிழருக்கு
வாக்களிப்போம்..
நம் அரசியலை
சுத்தம் செய்வோம்..



Wednesday, April 13, 2016

சொல் அல்ல செயல்..

தொடர்ச்சியான "நாம் தமிழர்" முகநூல் பகிர்வுகளோடு தொடர்ந்தது என் தொகுதி வேட்பாளருடனான  தொலைபேசி உரையாடல்..

வணக்கம்னே..
என்ற வட்டார வணக்கத்தோடு அறிமுகமானார் பொறியியல் பட்டதாரி.
என் குடும்பம், என் வாழ்கை என்று பழக்கப்பட்ட பொறியாளர்களுக்கு மத்தியில், அவர் அரசியலுக்கு வருவதற்கான காரணத்தை அடுக்கியது அவர் மீதான கவனத்தை கூடுதலாக்கியது.

நான் வளர்ந்து, வாழ்ந்த என் தொகுதின் சராசரி பிரச்சனைகளை அவர் வரிசைபடுத்த, நான் வாயடைத்து போனது என்னோமோ உண்மை..

நீங்க ஏன் ப்ரொஜெக்டர் பயன்படுத்தி பிரச்சாரம் பண்ண கூடாது ? என்ற என் கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்காகத்தான் இந்த பதிவு.

பதில்: இந்த மாச சம்பளம் வந்தவுடன பண்ணலாமுன்னு இருகேன்ன்னே..

தொடர்ந்து சில மணித்துளிகள்  பேசிவிட்டு கணத்த இதயத்தோடு தொலைபேசியை அணைத்தேன்.

அப்போதுதான் புரிந்தது
நாம் தமிழர்
முன் வைக்கும்
மாற்றம் என்பது
சொல் அல்ல செயல் என்று...

நாம் தமிழர்.. 

Monday, April 11, 2016

ஓட்டு - நிலைப்பாடு..

என்னால் என்ன
ஆகப்போகிறது
அரசியலுக்கு?
அரசியலால் என்ன
ஆகப்போகிறது
எனக்கு ?
என்ற இரண்டு
நிலைப்பாட்டையும்
தயவுசெய்து 
விட்டொழிப்போம்.. 

அறிமுகமான
நண்பர்களின்
அரசியல் பற்றிய
ஒரு முகநூல்
பதிவு யாரோ
ஒரு நண்பருக்கு
அரசியல்
அறிமுகமாக
இருக்கலாம்
என்று  நம்புவோம்.

ஜெயிக்கிற கட்சிக்கு
ஓட்டு போடணுங்கற
பாமர மனநிலை
படித்தவர்களிடமும்
இருக்கிறது  என்பதால்
உங்களின் ஒரு பதிவு
உங்கள் நண்பர்களின்
வாயிலாக பலரை
மாற்றும்
என்று  புரிவோம்.

என் ஓட்டு
தோற்று போய்விடக்கூடாது
என்பதற்காக
நமக்கு
பிடித்த கட்சியை
விட்டுவிட்டு
பெரும்பான்மையை
ஆதரிப்பது
தவறென்று
திருந்துவோம்..

எதிர் நிலைப்பாடு
மட்டுமே கொண்டவர்கள்
எந்த கட்சியையும்
அடையாளம்
காட்ட மாட்டார்கள்
என்பதை அறிவோம்.

ஆதரிப்போம் நாம் தமிழர்.
பகிர்வோம்..
பரப்புவோம்.



Sunday, April 10, 2016

நில் கவனி கடந்து போகாதே..

என் முகநூல் நண்பர்களுக்கு

"நாம் தமிழர்"
கருத்துக்களையும்,
காணொளிகளையும்  சிலர்
திரும்ப திரும்ப
பதிவிடுவதன் காரணத்தை
எப்போதாவது யோசித்ததுண்டா ?

பதிவிடுபவர்களின்
முந்தைய பதிவுகளை
வைத்து அவர்கள் தன்னை
முன்னிறுத்தி பதிவிடுபவர்களா?
அல்லது விளம்பரத்திற்காக
பதிவிடுபவர்களா?
என்று ஆராய்ச்சி நடத்தியதுண்டா ?

நாம் தமிழரை
குற்றம் சொல்பவர்களை
தவிர்த்து பிற கட்சிகளை
வெளிப்படையாக
ஆதரிக்கும் நண்பர்கள்
யாரேனும் உள்ளார்களா
என்று வினவியதுண்டா ?

இன்றைய கால கட்டத்தில்
ஒரு அரசியல்  நிலைப்பாட்டை
அறிந்து அதனை ஆதரித்து
பொது தளத்தில் பதிவிட
முன்வரும்
உங்கள் நண்பர்களின்
எண்ணிக்கை
என்ன தெரியுமா?

பிற கட்சிகளை
சேர்ந்த உங்கள்
நண்பர்களில்
எத்தனை பேர்
இப்போது
நாம் தமிழரை
ஆதரிக்கிறார்கள் என்று
கணக்கு பார்த்ததுண்டா?

இந்த கேள்விகளை
உங்களுக்குள் கேட்டு
பதில்களை வரிசைபடுதினால்
மிஞ்சுவது நீங்கள்
நாம் தமிழரை
ஆதரிக்க வேண்டும்
என்ற நிலைப்பாடு
மட்டுமே..

தமிழகத்தில்
நாம் தமிழரை
நிராகரித்துவிட்டு
நீங்கள்
எந்த கட்சிக்கு
ஒட்டு போடா போகிறீர்கள்?

ஊழலில் தின்று கொழுத்த
திராவிட கட்சிகளுக்கா  ?

சகதியில் ஊறித் திளைக்கிற
சாதிக் கட்சிகளுக்கா ?

பேரம் படியாமல் கூடி நகைக்கும்
கூட்டணி காட்சிகளுக்கா ?

நம் மௌனம்தான்
இதுவரை ஆண்ட,
ஆளுகிற
கறைபடிந்த
கட்சிகளின் வெற்றி..

மௌனம் களைப்போம்..

கொத்துக் கொத்தாய் 
கொன்று குவிக்கப்பட்ட 
நம் சொந்தங்களை 
காப்பாற்ற முடியாத  
குற்ற உணர்ச்சி நமக்கு 
இன்னும் இருக்குமானால்..

காட்டு மரம் 
வெட்டியதற்காக 
ஓடவிட்டு
சுட்டுக் கொல்லப்பட்ட 
தமிழர்களை  பற்றிய 
பரிதாபம் நமக்கு 
இன்னும் இருக்குமானால்.. 

அம்மாவின் சிறைக்காக 
கண்ணீர் சிந்தும்   
அண்டை மாநில 
தண்ணீருக்காக   
பிச்சை எடுக்கும்  
அவமானம்  நமக்கு 
இன்னும் இருக்குமானால்.. 

நம்  கரங்களை 
வலுப்படுத்துவதை தவிர 
வேறு வழியே இல்லை..
ஆதரிப்போம் 
நாம் தமிழர்..

இது  
தமிழ்நாட்டில்
வாழ்ந்த 
வாழ்கிற 
தமிழ் பேசும் 
நாம் ஒவ்வொருவரின் 
கடமை..

பகிர்வோம்... 
பரப்புவோம்..
நாம் தமிழர்..